கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில்  சரிந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 37 லட்சத்து 70 ஆயிரத்து 949 ஆக குறைந்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில், இதே கால கட்டங்களில், 98 லட்சத்து 69 ஆயிரத்து 520 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, 91 லட்சத்து 98 ஆயிரத்து 205 ஆக குறைந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 71.1 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 28.9 சதவீதமாகவும் உள்ளது.ஆனால் முதுகலை பட்டப்படிப்பிற்குப் பின் 9.4 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆய்வு படிப்பிற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் அளவு 26.3 சதவீதமாக உள்ளது. 

இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் மாணவிகள் அதிகளவில் உயர்கல்விக்கு செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.சி., பி.காம்., படிப்புகளுக்கு பிறகு பி.ஏ., பட்டப்படிப்பை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்வதாகவும் இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here