உயரும் கடல்மட்டம் : 1.30 கோடி அமெரிக்கர்களுக்கு ஆபத்து

0
106

அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் கடற்மட்டம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் சுமார் 1.30 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2100 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் பல கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மாற்றிடங்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்படும். 

கடற்மட்டம் உயர்ந்து, பரவலாக நாட்டின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, அங்கு வாழும் மக்கள் நாட்டின் வேறு நகரங்களுக்கு குடிபெயருவார்கள்.

இதனால் ஒரு சில நகரங்களில் வாழும் மக்கள் தொகை கணிசமாக அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளுக்கு கடும் போட்டி, வீடுகளின் விலை உயர்வு, கட்டமைப்பை மேம்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here