சூஃபி ஞானி பீர் முகமது அப்பா (பீரப்பா) 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சித்தர். அவருடைய மெய்யியல் (இறையியல்) பாடல்களின் எண்ணிக்கை 18000 என்று நம்பப்படுகிறது. அன்னார் தவமிருந்த மலை வாசஸ்தலம் இன்றளவும் பீர்மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. தென்காசியில் வாவஞ்சியின் பேரராகப் பிறந்தார் இந்த ஞானி. தவத்துக்குப் பின்னர் பல ஊர்களுக்குச் சென்று ஞானத்தை விளக்கிய பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசித்து அங்கேயே சமாதியடைந்தார். இவரது பாடல்களை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.சாகுல் ஹமீது பொருளுடன் விளக்குகிறார். ஜனவரி 9, 2021 அன்று இந்தப் பல்சமய உரையாடல் நிகழ்வை இப்போது ஊடகக் குழுமமும் ஐக்கிய ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.  

சூஃபி ஞானி பீரப்பாவின் பாடல்களைப் பாடி விளக்குகிறார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ.சாஹுல் ஹமீது. | SONGS OF SUFI SAINT PEERAPPA EXPLAINED BY RETIRED HEADMASTER A.SHAHUL HAMEED

நாதமும் தாளமும் நீயானாய்

ஒசக்கம்மா

சூஃபி ஞானிகள் சமூகப் போராளிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here