உன்னாவ் பாலியல் வழக்கு குறித்து போலீஸிடம் தாறுமாறாக கேள்வி கேட்ட மாணவி; திணறிய போலீஸ்

0
289

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கால்  பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்  சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய  அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்ப்பட்ட பெண்,  அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது. இந்த விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. கொலை முயற்சி என்று எம் எல் ஏ குல்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடை பெற்று வருகிறது. விபத்து குறித்த விசாரணையை 7 நாடகளுக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் விரிவுரை வழங்கினார்.  

உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு வழங்க வந்தனர். அப்போது, ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி போலீஸிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடி போனார். 

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதில், உன்னாவ் வழக்கில் பாஜக எம்எல்ஏ-வால் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் தெரிவித்த நிலையில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கிரது. அது விபத்து அல்ல என்று அனைவருக்கும் தெரியும் அந்த லாரியில் பதிவு எண் கூட இல்லை. 

சாதாரண மனிதர்களை எதிர்க்கலாம் ஆனால் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களை எதிர்த்து போராடும்  போது அவர்களை சட்டம் தண்டிப்பதில்லை.  

இதுதான்  சாதாரண மனிதர்களை எதிர்க்கும் போதும், அதிகாரத்தில் இருக்கும்  மனிதர்களை எதிர்ப்பதிலும் உள்ள வித்தியாசம். தற்போது அந்த சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். நாங்கள் நிர்பயா வழக்கு, ஆசிஃபா வழக்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். நானும் இது மாதிரி பாதிக்கப்பட்டு போராடினால் என் பாதுகாப்புக்கு நீங்கள் உத்தரவாதம் தர முடியுமா? எனக்கு எதுவும் நேராது என்று உத்தரவாதம் தரமுடியுமா?  என்று அந்த மாணவி சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

இதைத்தொடர்ந்து, இதற்கு பதிலளிக்க  முடியாமல் அந்த போலீஸ் அதிகாரி திகைத்து அமைதியாக இருக்கிறார். 

‘Will I Meet Unnao Survivor’s Fate?’: Schoolgirl Questions UP Cop

The student stood up and asked: "If the person against whom we are complaining comes to know about it, and if we have an accident, what will happen?"Read the full story here: https://bit.ly/2ZpwEyz

The Quint यांनी वर पोस्ट केले बुधवार, ३१ जुलै, २०१९

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here