உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு: பாஜக எம்எல்ஏ மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

0
234

உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சேங்கருக்கு எதிராக போக்சோ (POCSO) மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய டெல்லி அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஆணையிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012 என்பதுதான் சுருக்கமாக போக்சோ சட்டம் என்று அழைக்கப்படுகிறது. குல்தீப் சிங் சேங்கர் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டியுள்ள பெண் சம்பவம் நடந்தபோது மேஜர் வயது அடையாதவர் என்பதால் இந்த சட்டம் இந்த வழக்கில் பிரயோகிக்கப்படுகிறது.

உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கில் குல்தீப் சேங்கர் மற்றும் பிறருக்கு எதிராக விசாரணை தொடங்கவிருப்பதை இது காட்டுகிறது.

சட்டப்பிரிவு 376(1), (பாலியல் வல்லுறவு), 120 (பி) (கூட்டு சதி) மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டப்பிரிவு 3, 4 மற்றும் போக்சோவின் 4வது சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டது.

குல்தீப் சிங்குக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உத்தர பிரதேசத்தின் சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றுவதற்கு ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

டெல்லியில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, இந்த பாலியல் வல்லுறவு வழக்கை தினமும் விசாரித்து, 45 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த ஆணையில் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here