உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை: சிபிஐ

0
705

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும், உத்திரப் பிரதேச போலீசார் குல்தீப் சிங் செங்கரை காப்பாற்ற முயற்சித்தனர் என்பதும் சிபிஐ விசாரணையில் உறுதிபடுத்தியுள்ளது .

உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் சிறுமி பலாத்காரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், உத்தரப்பிரதேசத்தின் மகி கிராமத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரின் வீட்டில், கடந்த ஜூன் 4ம் தேதி உன்னாவ் சிறுமியை எம்எல்ஏ செங்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யும் அறைக்குக் காவலாக, அவரது பெண் உதவியாளர் ஷாஷி சிங் உதவியுள்ளார் என்பதும்
உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ செங்கர் உட்பட சிலர் தன்னை பாலியல் வன்கொடுமைச் செய்ததாக உன்னாவ் சிறுமி தொடர்ந்து கூறி வந்ததிருக்கிறார். ஆயினும் முதல் தகவல் அறிக்கையில் உத்தர பிரதேச போலீஸார் குல்தீப் சிங் செங்கர் மற்றும் சில குற்றவாளிகளின் பெயரை குறிப்பிடவில்லை என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிபிஐ அளித்த தகவலைக் குறித்து பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி என்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கும், என் அப்பாவை கொலை செய்ததற்கும் எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

https://twitter.com/ANINewsUP/status/994799555987300353 .

சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்டதாகக் கூறிய பெண்ணை மருத்துவபரிசோதனைக்கும் அனுப்பாமல், அவரது ஆடைகளையும்ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். இது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

2017, ஜூன் 4 ஆம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்று பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர் ஷாஷி சிங் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக எம் எல் ஏ வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். எம் எல் ஏவின் மிரட்டலுக்கு பயந்து ஜூன் 4 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை சிறுமி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் எம் எல் ஏவின் ஆட்களால் கடத்தப்பட்டு ஜூன் 19 வரை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தபட்டார் – என்று பிரபல ஆங்கில நாளிதழில் பிரசுரமான தகவலை ஆதாரமாக சிபிஐ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்
சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங்
என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள்
கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் மற்றும் சிபிஐ அதிகாரி என்றும் கூறிக் கொண்டு இரண்டு பேர் மே 10, வியாழகிழமை குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக இருக்கும் வழக்கை தள்ளுபடி செய்து தருவோம் என்று குல்தீப் சிங் செங்கரின் மனைவி சங்கீதா சிங்கிடம் 1 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள் . எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரை பாதுகாப்பாக சிறையிலிருந்து வெளியேக் கொண்டு வருவோம் என்று அவர்கள இருவரும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை .

நன்றி : Hindustan Times

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here