உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

0
1056

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவமும் , ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, போலீசார் உட்பட எட்டு பேரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விரு வழக்குகளிலும் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும், ஜம்முவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு மதச்சாயம் பூசப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு சொல்கின்றன இக்கார்ட்டூன்கள் .

மனதைப் பிசையும் இந்த இரு சம்பவங்களைப் பற்றிய கார்ட்டூன்கள்

கீழே உள்ள இந்த பிபிசி கார்ட்டூன் உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைப் பற்றிய இந்த கார்ட்டூனில் [ “Beti bachao; Beti ke papa ko bhi bachao,” – save the girl child, and save her father, too] பெண் குழந்தையையும், அவளது அப்பாவையும் பாதுகாப்போம் என்று இடம்பெற்றிருக்கிறது .

கீழே உள்ள கார்ட்டூன் : அரசியல் தலைவர்கள் ஊர்வலமாக [“Beti Bachao” (Save the Girl Child)] “பெண் குழந்தையை பாதுகாப்போம்” என்று கோஷமிட்டு வரும்போது ஒரு குடும்பத் தலைவர் பெண்களை உள்ளே போகும்படி சொல்வதாகவும், பெண் குழந்தைகளை மறைத்து வையுங்கள் [“Beti chhupao”, hide the girl child] என்று சொல்வதாகவும் உள்ளது.

நன்றி Scroll.in

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here