ஷாருக்கான் என்ற 22 வயது வாலிபரை, எருமை மாடு திருட வந்தவர் என்று சந்தேகப்பட்டு கொடூரமாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

பரேல்லி மாவட்டத்தில் உள்ள போல்பூர் ஹிந்தோலயா என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக என் டி டிவி தெரிவித்துள்ளது.

துபாயில் இருக்கும் ஒரு எம்ப்ராய்டரி நிறுவனத்தில் ஷாருக்கான் வேலை செய்து வந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன் உத்தர பிரதேசத்தில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஷாருக்கானின் சகோதரர், ஃபிரோஸ், ‘ஷாருக் கானுக்கு அவன் நண்பன் ஒருவனிடமிருந்து போன் மூலம் அழைப்பு வந்தது. வெளியே சென்ற ஷாருக் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை’ என்றார். காலையில்தான் போலீஸிடமிருந்து ஷாருக்கின் குடும்பத்துக்கு போன் அழைப்பு வந்துள்ளது.

காவல் துறைக்கு தவகல் அளித்த கிராமத்தினர், ‘ஷாருக் கான் மற்றும் அவரது 3 நண்பர்கள் எருமை மாடுகளை திருட முயன்றனர்’ என்று கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்த ஷாருக்கானை, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறப்பட்டிருக்கிரது. . இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி அபிநந்தன் ‘எங்களுக்கு சம்பவம் குறித்து கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான நபரை நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர், போதை மருந்து பழக்கமுடையவர் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது அவர் அதிக போதையில் இருந்துள்ளார். அவர் வெகு நாட்களாக போதை மருந்து பயன்படுத்தி வந்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உள் காயங்கள் காரணமாகத்தான் இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் போதை மருந்து இருந்ததற்கான தடயங்கள் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூத்த போலீஸ் அதிகாரி அபிநந்தன், இது கும்பல் கொலைதான் . ஷாருக்கான் உடபட் 4 பேர் சேர்ந்து மாட்டை திருடும் போது கும்பலிடம் மாட்டிக் கொண்டனர். அப்போது மற்ற 3 பேர் அருகிலிருக்கும் குளத்தில் குதித்து தப்பி விட்டனர். ஷாருக்கானுக்கு நீச்சல் தெரியாததால் அவர் கும்பலிடம் மாட்டிக் கொண்டார். உடற்கூறு அறிக்கையில், அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்றுதான் தகவல் வந்துள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஒரு வழக்கு, 25 பேர் சேர்ந்து ஷாருக் கானை கொலை செய்ததாகவும் இன்னொரு வழக்கு, எருமை மாடு திருடியது என்றும் பதியப்பட்டுள்ளது . இந்த இரண்டாவது வழக்கில் ஷாருக்கான் மற்றும் அவரது 3 நண்பர்களின் பெயர் எஃப்ஐஆர்-ல் பதிவாகியுள்ளது.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here