உத்தர பிரதேசத்தில் பசுக்களுக்கு 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை

0
279

நோய்வாய்ப்பட்ட பசு மாடுகளை காக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்‌சுமி நாராயண் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பசு மாடுகளின் உயிரை காக்கும் நோக்கில் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்களுடன் அழைப்பு கோரிய 15 முதல் 20 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்தடையும். இதற்காக லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது. இத்திட்டம் அமலுக்கு வரும்போது நாட்டிலேயே இது முதல்முறையாக இருக்கும்” என்றார்.

மேலும், “இலவச உயர் தர விந்தணு திட்டம் மற்றும் எம்ப்ரியோ ட்ரான்ஸ்ப்ளான்ட் தொழில்நுட்பம் வழியாக உத்தரபிரதேசத்தில் மாடுகளை பெருக்கும் மேன்மையடையும். எம்ப்ரியோ தொழில்நுட்பம் வழியாக மலட்டு மாடுகளைக் கூட பால் கொடுக்கும் மாடுகளாக மாற்ற முடியும்” என்று லக்‌சுமி நாராயண் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here