உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அசத்தலான அறிவிப்பு

0
261

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாழும் மக்களில், குடும்ப அட்டை இருக்கிறதோ இல்லையோ, ஆதார்  அட்டை இருக்கிறதோ இல்லையோ, யார் ஒருவருக்கு அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகிறேதா, அவர்களுக்கு பொதுவழங்கல் துறையின் கடைகள் மூலம் பொருட்களை வழங்க வேண்டும்.

ஒரு வேளை, அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பொது வழங்கல் துறை மூலம் வழங்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here