உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியை புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயாராக உள்ளார்களா என மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிற்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை கடுமையாக தாக்கி பேசி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘ இன்று என்னிடம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளின் அறிக்கை இருக்கிறது.

இதில் 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 70% மோசடி, 69% கொள்ளை, 32% கொலை, 86% கலவரம், 22% வரதட்சணை மரணம், 52% பலாத்கார வழக்குகள் குறைந்துள்ளன. மாயாவதிக்கும் , அகிலேஷ் யாதவிற்கும் நேரடியாக சவால் விடுக்கிறேன். இந்தப் புள்ளி விவரங்களுடன் என்னுடன் விவாதிக்கத் தயாரா?’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here