உத்தரப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 15 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அங்கு என்கவுண்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர், உத்தரப் பிரதேச மாநிம் மதுராவின் மோகன்புர் பகுதியில், போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் (8) என்னும் சிறுவன், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அங்கு தொடர்ந்து என்கவுண்ட்டர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 48 மணி நேரத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைப் பிடிப்பதற்காக அம்மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 15 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

2000-17ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 1,782 போலி என்கவுண்ட்டர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 44.45 சதவிகித வழக்குகள் (794 வழக்குகள்) பதிவாகியுள்ளன.

நன்றி: firstpost

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here