உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹஜ் இல்லத்தின் வெளிப்புறச் சுவர்களில் காவி வர்ணம் பூசப்பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையால், அந்த வர்ணத்தை நீக்கிவிட்டு மீண்டும் பழைய வர்ணமே பூசப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், தலைமைச் செயலகம், முக்கிய அரசு அலுவலகங்கள், முதல்வர் இல்லம், பள்ளிக்கூடப் பைகள் அனைத்தும் காவி வர்ணத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

haj-1

இந்துத்துவா மற்றும் சங்பரிவார அமைப்புகளின் வண்ணமாக காவி இருப்பதால் அதனை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும்நிலையில், லக்னோவில் உள்ள ஹஜ் கமிட்டி இல்லத்தின் வெளிப்புற சுவரிலும் காவி வர்ணம் பூசப்பட்டது.

haj-2

இது பலத்த சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் ஹஜ் இல்லத்தின் வெளிப்புறச் சுவர்களில் பூசப்பட்டிருந்த காவி வர்ணத்தை நீக்கி விட்டு, மீண்டும் பழைய வர்ணமே பூசப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்