உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோராக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தும், புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ்பிரசாத் மவுரியாவும் அம்மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனையடுத்து காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.11) இடைதேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இதன் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த 25 வருடமாக யோகி ஆதித்யநாத் வசமிருந்த கோரக்பூர் மக்களவைத் தொகுதியை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் புல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சியே வெற்றிபெற்றுள்ளது.

yogi

இந்த முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியைக் குறைத்து மதிப்பிட்டதே இந்தத் தோல்விக்குக் காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்