பிரதமர் நரேந்திர மோடி, பல துறை அறிஞர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன்  உரையாடினார். உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் என்று கூறினார்.

தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு நிலையான அரசாங்கம் மாநிலத்தில் தேவை என்று பிரதமர்  மோடி வலியுறுத்தினார்.

இங்குள்ள ராமன் நிவாஸில் நடைபெற்ற ‘பிரபுத் வர்க் சம்மேளலன்’ இல் கிட்டத்தட்ட 200 பங்கேற்பாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாடினர். பத்ம பூஷண் விருது பெற்றவரும் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகருமான சன்னுலால் மிஸ்ரா மற்றும் பிஎச்யு துணைவேந்தர் சுதிர் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘கேசவ் பான் வாலா’ என்று அழைக்கப்படும் பிரபல பான் விற்பனையாளர் அஸ்வனி சௌராசியா மற்றும் டீ விற்பனையாளர் பப்பு ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அசோக் திவாரி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக  மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு தெருவுக்கு காசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று பங்கேற்பாளர்களிடம் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல் மார்ச் 7-ம் தேதி வாராணசி மாவட்டம் உள்பட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here