உத்தரக்கண்ட் பனிப்பாறை வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் சோனு சூட்

Alam Singh Pundir, who worked as an electrician in the Tapovan Hydropower project, lost his life leaving his wife and four daughters behind at Loyaal village of Tehri district

0
260

சோனு சூட் கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த பேருதவிகள் அவரை ஹீராவாக்கியது .  இப்போதுவரை, தனது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார்.

சமீபத்தில் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரின் வருமானமே குடும்பத்தைக் காப்பாற்றி வந்து நிலையில் திடீர் பேரிழப்பால் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் பரிதவித்து போயினர்.

இந்நிலையில்தான், சோனுசூட்டிடம் சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா,காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக சோனு சூட் அறிவித்திருக்கிறார்.இதுகுறித்து, சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here