பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் ‘#MeToo’ மூலம் தங்களுக்கு நடந்தவற்றை தைரியத்துடன் எடுத்துரைத்து வரும் நிலையில் இதுபற்றி தனது கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்கள் சுயமரியாதையுடனும், நன்முறையிலும் நடத்தப்பட வேண்டும் என்பதை (me too )இதன் மூலம் ஒவ்வொருவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது . தங்களுக்கு நடந்த துயரத்தை தைரியத்துடன் வெளியே கூறுபவர்களை பாராட்டுகிறேன். உண்மை உரக்கவும் , தெளிவாகவும் சொல்லப்பட வேண்டும். இது மாற்றத்தை கொண்டு வர உதவும் என்று ##MeToo ஹாஷ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் இருந்த பெண்கள், சமூகவலைதளங்களில், மீடூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்