நீதிமன்றங்கள் குறித்தும், காவல்துறை பற்றியும் மிக மோசமான விமரிசனத்தை முன்வைத்த பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜாவுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெச். ராஜா, நீதிமன்றங்கள் குறித்தும், தமிழகக் காவல்துறை டிஜிபியின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது பற்றி காவல்துறை குறித்தும் மிக அவதூறாகப் பேசினார். இது பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவும் செய்துள்ளது.

இதற்கிடையே, சென்னை தாம்பரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றம் குறித்து தவறான கருத்தைக் கூறியிருப்பது குறித்து ஹெச். ராஜா மறுத்துள்ளார். உண்மையை சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்