உண்மையான பெண்ணியம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் : தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மானின் மகள்

AR Rahman’s daughter Khatija replied to Taslima Nasreen saying that she should google what true feminism means because it isn’t bashing other women.

0
1201

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா. இவர் பொதுவெளியில் தன் முகம் காட்ட விரும்புவதில்லை. எப்பொழுதும் புர்கா அணிந்து தான் வெளியே வருவார். பல விழா மேடைகளிலும் அவர்  புர்காவுடதான் வலும் வருகிறார். அம்பானி வீட்டு விசேஷத்தில் கூட கதிஜா புர்கா அணிந்துதான் சென்றிருந்தார். அவர் விரும்பி புர்கா அணிகிறார்.  இதற்காக அவரை பலரும் விமர்சித்தார்கள்.

இந்நிலையில், சர்ச்சை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது டிவிட்டரில் பதிவில், எனக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றால் பிடிக்கும். ஆனால் அவரின் அருமை மகளை பார்க்கும்போது மூச்சு முட்டுகிறது. படித்த பெண்கள் கூட எளிதில் மூளைச்சலவை செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

கதிஜா ரஹ்மான் கண்கள் மட்டும் தெரியும்படி புர்கா அணிவதை தான் தஸ்லிமா இப்படி விமர்சித்தார். அதை பார்த்த கதிஜா தஸ்லிமாவுக்கு தக்க பதில் அளித்துள்ளார். இவரது டிவிட்டர் பதிவிற்கு இன்ஸ்டாகிராமில்பதிலளித்த கதிஜா, ஓராண்டு தான் ஆகிறது இந்நிலையில் மீண்டும் இந்த பேச்சு கிளம்பியுள்ளது. நாட்டில் பல விஷயங்கள் நடக்கிறது. ஆனால் ஒரு பெண் அணிந்திருக்கும் உடை பற்றி தான் மக்களுக்கு அக்கறை. இந்த டாபிக் வரும் ஒவ்வொரு முறையும் என்னுள்  இருக்கும்  நெருப்பு என்னை கோபமடையச் செய்வதுடன் இது குறித்து நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது என்கிறார் கதிஜா.

நான் எடுத்த முடிவுகளை நினைத்து வருத்தப்பட மாட்டேன். நான் செய்வதை நினைத்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி. என் வேலை எனக்காக பேசும். மேலும் எதுவும் கூற விரும்பவில்லை. என் உடையை பார்த்து உங்களுக்கு மூச்சு திணறுவதற்கு சாரி டியர் தஸ்லிமா நஸ்ரின். எனக்கு மூச்சு முட்டவில்லை. மாறாக நான் பெருமைப்படுகிறேன் என்று கதிஜா கூறுகிறார்.

உண்மையான பெண்ணியம் என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் பிற பெண்களை விமர்சிப்பதும், அவர்களின் தந்தையை அந்த விவகாரத்தில் ஈடுபடுத்துவதும் பெண்ணியம் இல்லை. பரிசீலனை செய்யக் கோரி என் புகைப்படத்தை நான் ஒன்றும் உங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here