கனா படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஓடாத படங்களுக்கும் வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். கனா அப்படியில்ல, உண்மையாகவே வெற்றி பெற்ற படம் என்று கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. அவர் பேச்சில் இருந்த உண்மை திரையுலகினரை சங்கடப்பட வைத்ததில் ஆச்சரியமில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கனா சக்சஸ் மீட்டில் வேடிக்கைக்காக அப்படி பேசினேன். எந்தப் படத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. எல்லா படங்களும் பிளாக் பஸ்டராக பிரார்த்தனை செய்கிறேன். ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால் உண்மையாகவே வருந்துகிறேன் என கூறியுள்ளார்.

ஓடாதப் படங்களுக்கும் சக்சஸ் மீட் வைப்பது தமிழ் சினிமாவில் பேஷனாகிவிட்டது. அதனை சுட்டிக் காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டியதில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்