உணவு டெலிவரியில் அமேசான்

Amazon has been wooing eateries with competitive commissions since mid-2019 as a part of a larger initiative to build a comprehensive product portfolio

0
251

அமேசான் நிறுவனம் இப்போது உணவு டெலிவரி வியாபாரத்தில் Amazon Food என்கிற பெயரில், தன் வலது காலை எடுத்து வைத்து, ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சொமேட்டோ போன்ற கம்பெனிகளுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளது. 

எல்லோரையும் போல, அமேசான் கம்பெனியும் தொடர்பு இல்லாத (Contactless) டெலிவரி செய்வார்கள், உணவு விலை கொஞ்சம் கம்மியாக இருக்கும் போன்றவைகளைத் தாண்டி  Hygiene Certification Bar என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  

அமேசான் நிறுவனம், ஒரு உணவகத்தில் சுத்தம் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவுக்கு சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். இந்த விதிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கும் உணவகங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் இருந்து மட்டும் தான் உணவு டெலிவரி செய்ய இருக்கிறார்கள் 

இப்போதைக்கு பெங்களூர் நகர் புறத்தில் பெல்லந்தூர், ஹரலுர், மரதஹல்லி, வொயிட் ஃபீல்ட் போன்ற இடங்களில் தான் சேவையைத் தொடங்கி இருக்கிறார்களாம். கூடிய விரைவில், அடுத்த சில வாரங்களில், அதிக மக்கள் இருக்கும் நகரங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறார்கள்.

ஏற்கனவே உணவு டெலிவரி வேலையைப் பார்த்து வரும் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற டெலிவரி கம்பெனிகளுக்கே, கொரோனா வைரஸ் பிரச்சனையால், டெலிவரி வியாபாரம் நஷ்டத்தில் இயங்கிக் கொட்ண்டு இருக்கிறது .  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here