உணவில் கலப்படம் செய்யவோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தனது மளிகைக் கடையில் தரமற்ற தனியா விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் தரமற்றது, பாதுகாப்பற்றது என்ற அதிகாரிகளின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி தனியார் நிறுவனம் சார்பாக மனோகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உணவு கலப்படத்தை தடுக்க தனித்துறை உள்ளபோதிலும் கலப்படம் அதிகளப்பில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

உணவு கலப்படம் தொடர்பாக மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது, உணவு கலப்படத்தை தடுக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் உணவு கலப்படம் தொடர்பாக ஓட்டல்கள், மளிகை கடைகளில் மக்கள் புகாரளிக்க அதிகாரிகளின் செல்போன் எண்களை ஒட்ட வேண்டும் என்றும் கூறினார்.அதுமட்டுமின்றி உணவு கலப்பட புகார் குறித்து அபராதம் மட்டும் விதிக்காமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதை தவறும் பட்சத்தில் அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கலப்படம் பற்றி புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை அறிவிக்குமாறு உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here