நட்சத்திர உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உணவு வீணாவதைத் தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவு வீணாவது குறித்து கடந்த மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ”ஒருவரால் இரண்டு இட்லிதான் சாப்பிட முடியும் என்னும்போது நான்கு இட்லிகள் வைப்பது தேவையில்லாதது. இதில் சாப்பிட முடியாத உணவுகள் குப்பைக்குச் சென்று விடுகின்றன.” என்றார்.

அதனால் உணவுப் பொருள் வீணாவதைத் தடுப்பதற்காக, வாடிக்கையாளர்கள் சாப்பிடும் அளவு மற்றும் பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்த கேள்விகள் அடங்கிய பட்டியல் உணவகங்கள் மற்றும் ரெஸ்டராண்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப்பெறும் பதில்களைக் கொண்டு உணவின் அளவை நிர்ணயிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: கர்ப்பக் காலங்களில் ஏற்படும் உடல்நலச் சோர்வைப் போக்கும் எளிய வழிகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்