துணிக்கடைகளில் துணியை நாம் மாற்றிப்பார்க்க போகும் அறையில் யாராவது நம்மை பார்க்கிறார்களா? எங்காவது கேமரா இருக்கிறதா? என்பதை நாம் யோசித்துக் கொண்டே இருப்போம். இனி அந்த கவலை வேண்டாம். உங்களை யாராவது துணி மாற்றும் அறையில் பார்க்கிறார்களா என்பதை நீங்களே சோதித்துக் கொள்ளலாம் இப்படி:

எவ்வளவு தூரம் நம்மால் அறையில் உள்ள ஒளியை பூதக்கண்ணாடியால் குவிக்க முடியுமோ குவிக்க வேண்டும். அந்த ஒளி மற்றொரு அறைக்கு போகுமானால் நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்.
277989140
அறையில் உள்ள எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள டார்ச்சை மட்டும் ஆன் செய்யுங்கள். அப்படி செய்யும்போது இரு வழிகளில் அந்த ஒளி பயணித்தால் மற்றொரு அறையில் யாரோ இருக்கிறார்கள் என அர்த்தம்.
699562469
அறையில் உள்ள கண்ணாடியை உங்கள் கைகளால் தட்டுங்கள். கண்ணாடி ஒரு சுவரின் மீது இருந்தால் அது ஒரு திடமான ஒலியை எழுப்பும். மற்றொரு அறை இருந்தால்  ’தொம் தொம்’ என வெற்று ஒலியை எழுப்பும்.
190822318
உங்கள் விரல் நுனியை கண்ணாடியின் மீது வையுங்கள். அப்படி வைக்கும் போது உங்கள் விரலுக்கும் விரலின் பிம்பத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஒட்டி இருந்தால் உங்களுடன் யாரோ விளையாடுகிறார்கள் என அர்த்தம்.
972259807
நன்றி:scoopwhoop.com