தற்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் கொரில்லா கிளாஸ் வகை தொடுதிரைகள் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. எனினும் இவற்றின் மீது சற்று பலமான பொருட்கள் மோதினால் அவை உடைந்து விடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

இந்நிலையில் இலகுவில் உடையாத மிகவும் வலிமை வாய்ந்த தொடுதிரையினை உருவாக்கும் முயற்சியில் சாம்சுங் நிறுவனம் இறங்கியுள்ளது. இத் தொடுதிரைகள் மெல்லியவையாக உருவாக்கப்பட்டுள்ள போதிலும் உடைக்க முடியாதவையாக இருக்கின்றன.

அதோபோன்று பரிசோதனையின்போது 1.2 மீற்றர் மற்றும் 1.8 மீற்றர்கள் உயரத்தில் இருந்து இத் தொடுதிரைகள் தரையில் விழ்ந்த போதிலும் எவ்விதமான பாதிப்பும் இவற்றிற்கு ஏற்படவில்லை.

இலகுவில் உடையாத இத் தொடுதிரைகள் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Galaxy S10 மற்றும் S10 Plus ஆகிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here