உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், கொள்ளு சேர்த்து சிறுதானிய கஞ்சியை வாரம் ஒரு முறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 2 டீஸ்பூன்
சிறுதானியம் – 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்)
வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மோர் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை :

கொள்ளு, சிறுதானியம் இரண்டையும் தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கொள்ளு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
பின்பு சிறுதானிய அரிசியை நன்றாக கழுவி வைத்துவிட்டு, கொத்தமல்லி, வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, பொடித்த கொள்ளு, சிறுதானிய அரிசி, தண்ணீர், வெந்தயக்கீரை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் போட்டு இறக்கி வைக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மோர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறிக்கொள்ளுங்கள்.

IMG_5911

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்