உடல் துர்நாற்றம் என்பது கோடை காலங்களில் பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில எளிய யோசனைகள்

இரண்டு முறைக் குளிப்பது

இரண்டு முறைக் குளிப்பதால் உடலில் துர்நாற்றம் அடிக்காமல் இருப்பத்தோடு உடல் சூட்டும் தணியும். இவ்வாறு செய்வதால் அதிகப்படியாக வியர்வைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லப்பலன் கிடைக்கும்

ஆடை அணிவதற்கு முன்னர் உடலை நன்றாக துடைக்க வேண்டும்

உடலில் ஈரத்துடன் உடை அணிவதால் எளிதில் வியர்க்கக்கூடும். அதனால் குளித்தப்பின்பு உடலை நன்றாகத் துவட்டிவிட்டு ஈரமின்றி உலர்ந்தபின்பு ஆடை அணிந்தால் வியர்வை ஏற்படுவது குறையும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதும் உடலில் அதிகப்படியான வியர்வை ஏற்படுவதைக் குறைக்கும்.

ஆன்டி பாக்டீரியல் சோப்பு பயன்படுத்தலாம்

ஆன்டி பாக்டீரியல் சோப்புகள் உடலில் பாக்டீரிய உருவாகுவதைக் கட்டுபடுத்தும். ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு தன்மை உடையது. அதனால் உங்கள் உடலுக்கு ஏற்ற சோப்பை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னர் பயன்படுத்தலாம்.

நல்ல உணவை உட்கொள்ளுதல்

எண்ணெய் அதிகமுள்ள, வறுத்த மற்றும் காரமான உணவு பண்டங்களை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற உணவுகளை உட்கொள்வதால் அதிகமாக வியர்க்ககூடும். மேலும் சிறிது வியர்த்தல் கூட கடுமையான துர்நாற்றம் வீசும். எனவே காய் மற்றும் பழங்களை அதிகமாக உண்பது உடலுக்கு நல்லது.

எலுமிச்சை பயன்படுத்துதல்

எலுமிச்சை பல பிரச்சனைகளுக்குத் தீர்வாகும். வியர்வையைக் கட்டுப்படுத்த எலுமிச்சை பழச்சாறை ஒரு வாலி தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இதனால் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்ற பிரச்சனைகள் இன்றியும் இருக்கலாம்.

சரியான ஆடை மற்றும் காலணிகளை அணிய வேண்டும்

நைலான் மற்றும் சிந்தடிக் வகை ஆடைகளை வெயில் காலங்களில் அணிந்தால் அதிகமாக வியர்க்கக் கூடும். அதனால் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது. இதனால் வியர்வைக் குறையும். மேலும், இறுக்கமான காற்றோட்டமற்ற காலணிகளை அணிய வேண்டாம். இதனால் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு துர்நாற்றம் வீசும்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரும் விசா எண்ணிக்கையைக் குறைத்து விட்டது; அதிர்ச்சியில் ஐடி நிறுவனங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்