நச்சுக்களை வெளியேற்றிப் போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமானதொரு வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

சரி, வாருங்கள்… தினமும் ஒரு வெள்ளரிக்காயை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் ஆராய்வோம்.

உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்

வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்!

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாகவிருக்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும்

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சினை இருக்கிறதா? அப்படியானால்…கவலையை விடுங்கள். தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.

வாய்த் துர்நாற்றத்தைப் போக்க ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும். அது வாயிலுள்ள கிருமிகளை அழித்துத் துர்நாற்றத்தைப் போக்கும்.

இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளைப் பலப்படுத்தும். அத்துடன் வாய்த் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்கும்

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்கப் பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்புப் படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் சிறப்பாக பணியாற்றுகிறது.

இதிலிருக்கும் சத்துக்கள் உடலின் அதீத பசியுணர்வைக கட்டுப்படுத்தி நீர்ச் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது.

தினமும் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளமையால் கொழுப்பு, காபோவைதரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

சரும பளபளப்பிற்கு வழி செய்யும்

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் காணப்படுவதால் தோல் சுருக்கமில்லாமலிருக்கிறது. மேலும் நீர்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுபவர்களுக்குத் தோல் ஆரோக்கியமாகவிருக்கும்.

நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமைத் தன்மையைக் கொடுக்கிறது.

கருப்பைப் பிரச்சினைகளுக்கு தீர்வு

பெண்களுக்கு மாதம்தோறும் ஏற்படும் இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். இந்த மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப் போக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால், அப் பெண்களின் உடலில் சத்துக்கள் குறைந்து மிகவும் சோர்வு உண்டாகிறது.

இச்சமயங்களில் வெள்ளரிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய், கருப்பை சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளும் நீங்குகிறது.

உடல்நலத்தைக் காக்கும்

பசிபோக்கி உணவைச் சாப்பிடத் தூண்டும் பசி உணர்வு ஆரோக்கியமான உடலுக்கு அறிகுறியாகும். ஆனால், சிலருக்கு அளவிற்கு அதிகமாகப் பசி எடுக்கும் நிலை ஏற்பட்டு அதிகம் சாப்பிட்டு உடலாரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளும் நிலை உண்டாகிறது.

இத்தகைய பிரச்சினை கொண்டவர்கள் அடிக்கடி வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் அதீத பசியுணர்வு ஏற்படாமல் உடல்நலத்தைக் காக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here