உடல் எடையை குறைக்க நீங்கள் கேக், கப் கேக், டோனட் போன்றவற்றை உண்பதை தவிர்த்துவிட்டீர்களா? தற்போது பெரும்பாலானோர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகின்றனர். உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நாம் உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.

கொய்யாப்பழத்தின் நன்மைகள்

கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சாட் மசாலா சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம். கொய்யாப்பழத்தில் மிக குறைந்த அளவே GI இருப்பதால் இரத்த சர்க்கரையை அதிகரிப்பதில்லை.
மேலும் உடல் எடை குறைப்பதிலும் கொய்யாவிற்கு பெரும் பங்கு உண்டு. உடலில் ஹார்மோன் ஒழுங்கற்று இருந்தால் அதற்கு கொய்யா சிறந்த தீர்வாக இருக்கும். இதில் மாங்கனீஸ் இருப்பதால் உடலுக்கு தேவையான நுண்சத்துக்கள் கிடைத்து விடுகிறது. கூடுதலாக கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்கும்.

கொய்யாவில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். கொய்யாவில் கலோரிகள் மிக குறைவு. 100 கிராம் கொய்யாவில் 68 கலோரிகள் இருக்கிறது என்பதால் உடல் எடை குறைக்க ஏற்ற பழம் இது.

கொய்யாவின் ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் கொய்யாவில் 68 கலோரிகள், 5.4 கிராம் நார்ச்சத்து, 2.55 கிராம் புரதம், 18 கிராம் தாதுக்கள், 22 கிராம் மக்னீஷியம்,40 கிராம் பாஸ்பரஸ், 417 கிராம் பொட்டாஷியம் ஆகியவை நிறைந்திருக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவும் கொய்யாப்பழம்.
[orc[