பழங்களிலேயே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் என்றால் அது மாதுளை தான். இதில் ஆண்டிவைரல் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் உடல் உபாதைகள் பலவற்றில் இருந்து தப்பலாம். இதில் பாலிஃபினால் இருப்பதால் தமணிகளில் இரத்த ஓட்டம் சீராகி, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கப்படுகிறது.

மேலும் மாதுளையில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிஇன்ஃப்ளமேட்ரி தன்மை நிறைந்திருப்பதால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மாதுளையை தினமும் சாப்பிடுவதால் சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. காலை மாதுளை சாறு அருந்துவதால், ஆண்களுக்கு Prostate-specific antigen (PSA) அளவு குறையும். பல் சொத்தை மற்றும் உடல் எடை குறையும் வாய்ப்பும் இருக்கிறது.

உடல் எடை எப்படி குறையும்?
மாதுளையில் ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபீனால், லினோலெனிக் அமிலம் போன்றவை இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க செய்யும். மற்ற பானங்களை விட மிகவும் ஆரோக்கியமானது மாதுளை சாறு. நம் உணவில் இருக்கக்கூடிய சர்க்கரை கொழுப்பு செல்களில் சென்று தங்கிவிடுகிறது.

ஆனால் மாதுளை சாற்றில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உகந்தது மற்றும் கலோரிகளில் குறைந்தது. நீங்கள் மாதுளை சாற்றை மார்க்கெட்களில் இருந்து வாங்கினால், சர்க்கரை சேர்க்கப்படாததை வாங்கவும். நீங்கள் வீட்டிலேயே தயாரித்து குடிப்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here