பார்லி என்பது ஃபைபர் நிறைந்த தானியமாகும். ஊட்டச்சத்து நிபுணர்கள் பயனுள்ள எடை குறைப்புக்கு பார்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

பார்லியின் ஆரோக்கிய நலன்கள்

உடலில் கொழுப்பு அளவை குறைப்பதில் பார்லி உதவுகிறது. பார்லியில் கொலஸ்டிரால் அளவைக் கரைக்கக்கூடிய ஃபைபர் நிறைந்திருக்கிறது. பார்லி நீர் இது சிறுநீரகக் கற்களைச் சரிசெய்வதோடு சேர்த்து சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கான ஒரு இயற்கை தீர்வாக உதவுகிறது. “பார்லி நீர் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. எடை குறைப்பை ஊக்குவிக்கிறது என்று டயட்டீஸியன் ரீட்டு அரோரா கூறுகிறார். மேலும், நம் உடல் எடையைக் குறைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது

பார்லி நீரில் நார் சத்து நிரம்பியுள்ளது. அது நீண்ட நேரம் வயிற்று பசியை ஏற்படுத்தாமல் இருக்கும் மேலும் இது வறுத்த அல்லது ஜங்க் உணவுகளை உட்கொள்வதைத் தடுக்க உதவுகிறது. குறைந்த பசி ஒரு ஆரோக்கியமான எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எடை குறைப்புக்காக நீங்கள் பார்லி புல் சாறு குடிக்கலாம்.

பார்லி நீரில் உள்ள நார் சத்து உங்கள் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின்படி, பார்லி நீர் ஒரு செரிமான டானிக்காக கருதப்படுகிறது, இது செரிமானத்தை சரிசெய்ய உதவுகிறது, மேலும் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது .

எடை குறைப்புக்காக பார்லி நீரை தயாரிப்பதற்கு, முத்து போன்ற பார்லிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பார்லி மென்மையாகும் வரை வேகவைக்கவும் . ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற கணக்கில் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் . வெந்தவுடன் வடிகட்டி நீரை சேகரிக்கவும்.

பார்லி நீர் சுவையாக இல்லையென்று உணர்ந்தால், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு அல்லது தேனை அதில் சேர்க்கவும். பார்லி நீருக்கு சில சுவையைச் சேர்க்க நீங்கள் அதனுடன் இஞ்சி அல்லது பட்டையை சேர்க்கலாம். எடை குறைப்புக்கு இவை அனைத்தும் உதவுகிறது.

உங்களுக்கு இனிப்பு வேண்டுமென்றால், அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை (பிரவுன் சுகர்) சேர்க்கவும். வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம்.

பார்லி நீரை அதிக நாட்கள் பயன்படுத்துவதற்கு அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

உடற்பயிற்சிகளோடு சேர்ந்து உங்கள் தினசரி உணவுடன் பார்லி நீரை சேர்த்துக் கொள்ளவும்,இது எடை குறைப்புக்கு ஆரோக்கியமான டயட் மற்றும் ஆரோக்கியமான வழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here