vegetarian-greek-cabbage-soup

உடல் எடையைக் குறைக்க முட்டைக்கோஸ் சூப் செய்து சாப்பிடுங்கள். இன்று முட்டைக்கோஸ்சை வைத்து சூப் செய்வது எப்படி என்று தெரிஞ்சுக்குவோம் வாங்க.

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் – 200 கிராம்
கேரட் – 1
தக்காளி – 1
வெங்காயம் – 2
சோள மாவு – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

01) முட்டைகோஸ், கேரட், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

02) குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட், தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

03) ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து 5
நிமிடம் கொதிக்க விட விடுங்கள்.

04) பின் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால் போதும்.

தற்போது சுவையான முட்டைக்கோஸ் – மிளகு சூப் தயார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்