பூண்டு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் இருக்கின்றது.

ஏனெனில் பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்றவை ஏராளமாக உள்ளது.

அதுமட்டுமின்றி அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது.

அந்தவகையில் ஒருவர் பூண்டில் தயாரிக்கப்படும் டீயை குடித்து வந்தால் பல நன்மைகள் அள்ளி தருகின்றது.

குறிப்பாக பூண்டு டீயை தினமும் ஒரு டம்ளர் காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும் என்று கருதப்படுகின்றது.

தற்போது பூண்டு டீயை எப்படி தயாரிக்கலாம், அதன் நன்மைகள் என்னென்ன என்பவற்றை பார்ப்போம்.

தயாரிக்க தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் – 4 (பொடியாக நறுக்கியது)

தண்ணீர் – 3 கப்

தேன் – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1/2 கப்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஓரளவு சூடு குறைந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூண்டு டீ தயார்!

நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுப்பவராயின், பூண்டு டீயைக் குடிக்கும் முன், அந்த டீயைக் குடிக்கலாமா என உங்கள் மருத்துவரிடம் கேட்டு, அவரது அனுமதி பெற்ற பின் உட்கொள்ளுங்கள்.

நன்மைகள்:

ஒருவர் தினமும் பூண்டு டீ குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயின்றி வாழலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க நினைத்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடியுங்கள்.

பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.

அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளையும் தீர்க்க பூண்டு டீயை ஒரு கப் குடியுங்கள்.

பூண்டு டீயை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

பூண்டு டீயை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

பூண்டு டீயை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் நீண்ட நாட்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.

பூண்டு டீயை தினமும் குடித்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பூண்டு டீயின் முழு நன்மைகளையும் பெற நினைப்பவர்கள், பூண்டு பற்களை நறுக்கிய பின் 10 நிமிடங்கள் கழித்து தான் சூடேற்ற வேண்டும்.

அளவுக்கு அதிகமாக பூண்டு உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், தலைச் சுற்றல் போன்ற சிக்கல்களை சந்திக்கக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here