உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அறிமுகம்

Apple Watch Series 6 brings the blood oxygen monitor, which is going to be useful in tracking the level of oxygen in human blood

0
90

ஆப்பிள் நிறுவனம் நேற்று (செப்டம்பர் 15) ஆப்பிள் ‘டைம் ஃப்ளைஸ்’ என்ற பெயரில் முழுமையான டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நடத்தியது. இந்த ஆண்டில்2-வது முறையாக நடைபெறும் இந்த நிகழ்வு முழுவதுமாக மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நடைபெற்றது. 

நேற்று நடைபெற்ற டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 15 நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.

Eh-Ofa-UVk-AAVV90 Eh-Ofwu-Vk-AA2-GVp

இதற்கென வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யேக செயலியை ஆப்பிள் வாட்ச் கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவ குழுமங்களுடன் இணைந்து புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்க  இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை வழங்குகிறது.

இத்துடன் முன்பைவிட மேம்படுத்தப்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் இருக்கிறது. மேலும் புதிய வாட்ச் முன்பை விட அதிக வாட்ச்ஃபேஸ்களை கொண்டுள்ளது. 

Eh-OJS4-Wo-AEz-RM

சர்வதேச சந்தையில் புதிய ஆப்பிள் வாட்ச் புளூ அலுமினியம், நியூ கிராஃபைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக பேண்ட் மற்றும் ஸ்டிராப்களில் கிடைக்கிறது. 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை 399 டாலர்கள் இந்தியமதிப்பில் ரூ. 29367 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடல்துவக்க விலை 279 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 20535 என நிர்ணயம்செய்யப்பட்டு இருக்கிறது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here