உடல்நலம் குறைந்த அப்பாவை டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் கூட்டிச் சென்ற சிறுமி

0
562

உடல்நலம் குறைந்த அப்பாவை டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் கூட்டிச் சென்றுள்ளார் ஒரு மாணவி.  தந்தையை சைக்கிளில் அமரவைத்து  1, 200 கி.மீ. ஓட்டிச் சென்றுள்ளார். 

பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த பள்ளி மாணவி ஜோதி குமாரி. டெல்லியில், தனது தந்தையுடன் ஊரடங்கில் சிக்கிக் கொண்டார். ஜோதியின் தந்தை விபத்தில் காயம் அடைந்திருந்ததால் அவரால் நடக்க முடியாது . ஒரு டிரக் டிரைவரிடம் பீகார் செல்ல கேட்ட போது அவர் ரூ6000 கேட்டார். எங்களிடம் வெறும் 600 ரூபாய் மட்டுமே இருந்தது என்றார். 

வாகன போக்குவரத்து முடக்கப்பட்டிருந்ததால் 500 ரூபாய்க்கு ஒரு பழைய சைக்கிளை விலைக்கு  வாங்கி . காயம் அடைந்திருந்த தந்தையைச் சைக்கிள் பின்னால் உள்ள கேரியரில் அமர வைத்த ஜோதி, மே 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். மே 16 ஆம் தேதி பீகார் சென்று சேர்ந்தார். 

இரவு நேரங்களில் 2 -3 மணி நேரம் பெட்ரோல் நிலையங்களில் ஓய்வு எடுத்து கொண்டோம். பயணம் செய்த வழிகளில் மக்கள் உணவு கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் ஜோதி  

குண்டும் , குழியுமான சாலைகள், வெளிச்சம் இல்லாத இரவுப் பொழுதுகளை ஒருவாரம் கடந்து தந்தையுடன் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தார், ஜோதி குமாரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here