உடலை அறிந்து இயக்கி நாள்பட்ட நோவுகளைக் குணமாக்குகிறது ஜெயந்த் அக்குபஞ்சர் சிகிச்சை மையம்.

*

நீங்கள் கணினி முன்னாலேயே மணிக்கணக்கில் அமர்ந்திருந்தீர்கள். நீங்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரம் கணினி முன்னால் அமர்வது மட்டுமே உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்பினீர்கள். அவ்வாறே உங்கள் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்குப் பெரும் தொகை ஒன்றை உங்களால் கொடுக்க முடிந்தது. உங்களது அம்மா, அப்பாவின் சிரிப்பைப் பார்த்துப் பரவசமடைந்தீர்கள். ஆனால் உங்கள் மென்பொருள் பணியின் பதினோராவது ஆண்டில் நீங்கள் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. உங்கள் கழுத்தை நீங்கள் நினைத்தபடி திருப்ப முடியவில்லை. குடும்ப டாக்டரிடம் சென்றபோது, ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஊசி போட்டுக் கொள்ளும்படி சொன்னார். இருந்தாலும் பழைய நிலைக்குக் கழுத்து வருமா என்பதைப் பற்றி நிச்சயமாக சொல்ல முடியாது என்றார். இப்படிப்பட்ட நிலைமையில் என்ன செய்வீர்கள்?

*

நீங்கள் கை நிறைய சம்பாதிக்கிறீர்கள். விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இருவரும் மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்வை அனுபவிக்கிறீர்கள். இருவருடைய ஆரோக்கியத்திலும் எந்தக் குறைவும் இல்லை. ஆனால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காத்திருப்பு, ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும் நீள்கிறது. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பயன் அளிக்கவில்லை. இந்தச் சூழலில் என்ன செய்வீர்கள்?

*

இதுபோன்ற நிலைமைகளாக இருக்கலாம். அடக்க முடியாத ஆத்திரம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். நாள்பட்ட ஒற்றைத் தலைவலி கொண்டவராக நீங்கள் இருக்கலாம். நாள்பட்ட மூட்டு வலியால் நீங்கள் சிரமப்படலாம். இந்த எல்லா நிலைமைகளுக்கும் ஓர் அழகிய தீர்வு இருக்கிறது. உங்கள் உடலை அறிந்து இயக்குவதன் மூலமாக இந்த நாள்பட்ட வலிகளுக்கும் நோய்களுக்கும் குட்பை சொல்லலாம். நவீன வாழ்க்கை முறையின் அறிகுறிகளாக இருக்கும் மனஅழுத்தம், மனச்சோர்வு, அளவுக்கதிகமான மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றையும் தடுத்து நிறுத்த முடியும். உடலின் இயங்கு புள்ளிகளைப் பற்றிய ஞானத்துடன் அவற்றை இயக்கும் இந்த அற்புதக் கலைக்கு அக்குபஞ்சர் என்று பெயர். ஊசிமுனை வைத்தியம் என்று பரவலாக அறியப்படும் இந்தக் கலை, உடலின் வர்மப் புள்ளிகளை அறிந்து இயக்கி உங்களைக் குணப்படுத்துகிறது. இந்தக் கலையை முழுமையான சிரத்தையோடும் பக்தியோடும் நிபுணர்கள் பரிமளச் செல்வியும் மோகன் குமாரும் நடைமுறைப்படுத்துகிறார்கள். நீங்களோ, உங்கள் நட்புகளோ, சொந்தங்களோ ஆரோக்கியம் பெறுவதற்கு உடனே அவர்களை அணுகுங்கள்.

பதினோரு வருடங்களுக்கும் மேலாக அக்குபஞ்சரில் நிபுணத்துவம் பெற்றுத் திகழ்கிறார் பரிமளச் செல்வி. அக்குபஞ்சர் நிபுணர் பரிமளச் செல்வியின் திறமையைக் கருத்தில் கொண்டு, புகழ் பெற்ற பிரசாந்த் கருத்தரிப்பு மையம் குழந்தைப்பேறு சிகிச்சைக்கு இவரது சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. உலகப் புகழ் பெற்ற அக்குபஞ்சர் மாஸ்டர்களான மிங் கிங் ஜுவிடமும் டாக்டர் ஜேம்ஸ் சி.லுவிடமும் பரிமளச் செல்வி பயிற்சி பெற்றுள்ளார். அதனால்தான் பல நூற்றுக்கணக்கானோர் பரிமளச் செல்வியின் மூலமாக தீராத வலிகளிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். 

அக்குபஞ்சர் நிபுணர் பரிமளச் செல்வி +917708211515 & +919444060381

உலகப் புகழ் பெற்ற அக்குபஞ்சர் மாஸ்டர் மிங் கிங் ஜூவுடன் அக்குபஞ்சர் நிபுணர் பரிமளச் செல்வி. 

ஜெயந்த் அக்குபஞ்சர், சென்னை.

எமது இணைய தளத்தை இங்கே பாருங்கள்

எம்மை இன்ஸ்டாகிராமில் பின் தொடருங்கள்.

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here