அனைவரும் சுவைத்த கமபங்கூழின் நன்மைகளைப் பற்றி விரிவாகக் காண்போம். அந்தகாலத்தில் பஞ்சத்தின் காரணமாக உணவாக கம்ங்கூழ், சோளக்கூழ், கேழ்வரகுகூழ் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது இவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கம்மங்கூழ் செய்முறை:

கம்பை சுத்தம் செய்து அதனுடன் போதிய அளவு நீர் சேர்த்து குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊர வைக்கை வேண்டும். நன்றாக ஊரிய பின்பு அதனை உரலில் கொட்டி பாதியாக உடையும் அளவிற்கு உடைத்து, நன்றாக கொதித்த தண்ணீரில் இட்டு கிளறி அரைமணி நேரம் வேகவைத்தால் கம்மங்கூல் தயாராகிவிடும். இவற்றை மண்பானையில் விறகு அடுப்பில் சமைப்பதால் மிகவும் சுவையானதாக இருக்கும்.

கம்மங்கூழுடன் சேர்த்து வெங்காயம், மாங்காய் சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை நாக்கை விட்டு நீங்காமல் நிற்கும்.

கம்மங்கூழின் மருத்துவ குணங்கள்:

எண்ணற்ற மருத்துவ குணங்களை உடைய கம்மங்கூழ் அடிக்கடி உணவில் சேர்த்து வரும்போது உடலில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் காணப்படும். அவற்றில் சிலவற்றை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

கம்மங்கூழில் புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது இந்த கம்பு.

உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு இந்த கம்மங்கூல் மிகவும் உறுதுணையாகிறது. மேலும் சிறுநீர்ப் பெருக்கத்திற்கும் இது உதவுகிறது.

நரம்புகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து இதயத்தை வலிமைபடுத்தும் ஆற்றல் பெற்றது கம்பு.

பெரும்பாலான நோய்கள் தாக்கத்திற்கு உடல்சூடே காரணம். கம்மங்கூல் சாப்பிடுவதால் உடல் சூடு குறைக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.

கண் பிரச்சனைகளை குணமாக்கு கண் தெளிவாகத் தெரிய உதவி புரிகிறது.

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கம்மங்கூழுக்கு உண்டு. தினமும் கம்மங்கூழ் பருகுவதால் இவை இரண்டு நோய்களும் படிப்படியாக நம்மை விட்டு நீங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கம்பு அதிகப்படுத்து. கம்ங்கூழை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இளநரைப் பிரச்சனை வராது. மேலும் தாதுவை விருத்திபடுத்தவும் இது உதவியாக இருக்கும்.

கம்பில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் இரத்த உற்பத்தியை அதிகப்படுத்தி இரத்தச்சோகை நோயை நம்மை விட்டு நீக்கும்.

உடல் மெலிந்து உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கம்மங்கூழைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

இன்று இந்த கம்மங்கூழ் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக கிடைக்கக் கூடியது. இதை வெயில்காலங்களில் ரோட்டின் ஓரத்தில் மரத்தடியில் வியாபாரமாக பலர் செய்து வருகிறார்கள். உடலுக்கு குளிர்ச்சியையும் உடனடி புத்துணர்ச்சியையும் தரக்கூடியது கம்மங்கூல்.

உடற்கட்டை பேணிக்காத்துக்கொள்ள விரும்புவர்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் தொப்பை குறைந்து அழகான் உடற்கட்டைப் பெறலாம்.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கம்மங்கூழை கோடை காலத்தில் அதிகமாகவும், குளிர்காலத்தில் தேவைக்கு ஏற்றாற்போலவும் உண்டு உடல் நலனைப் பாதுகாத்திட வேண்டும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here