உடனடியாக இ-பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. Incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் இ-பான் கார்டை பெறலாம்.

இ-பான் கார்டை பெற ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். இது வசதி குறுகிய காலத்துக்கு மட்டுமே இருக்கும். முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே பான் கார்ட் வைத்திருப்பவர்கள் இ-பான் கார்ட் பெற முடியாது.

இ-பான் கார்ட் பெறுவது குறித்து தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்

* பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.

*தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.

*ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.

*ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள்

*ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.

*ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.

*பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்

*இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.

*இது ஆன்லைன் நடைமுறை என்பதால் இ-பான் பெற பேப்பர் ஆதாரச் சான்றுகள் தேவையில்லை.

*சரியான முறையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டதை உறுதி செய்ய 15 இலக்க எண் கொண்ட மெசேஜ் மொபைலுக்கு அனுப்பப்டும்.

#PANcard #E-panCard


courtesy:ndtv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here