உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து டிவீட் ; பிரசாந்த் பூஷண் குற்றவாளி எனத் தீர்ப்பு

Supreme Court: Lawyer Prashant Bhushan has been held guilty of contempt for his two tweets on Chief Justice of India SA Bobde and the Supreme Court

0
217

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது பதியப்பட்டிருந்த வழக்கில், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான அருண் மிஸ்ரா, பிஆர் கவாய் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது. 

நீதிமன்ற அமர்வு, இன்று பிராசாந்த் பூஷண் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து, வரும் 20 ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. 


உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தலைமை நீதிபதி மிக விலை உயர்ந்த பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்தது தொடர்பாக அவர் ட்வீட் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது. 


தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி பிரஷாந்த் பூஷன் இரண்டு டிவீட்களை பதிவிட்டிருந்தார். இதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. 

இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, “இந்த இரண்டு ட்வீட்களும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான பதிவுகள் இல்லை. நீதிபதிகளின் தனிப்பட்ட திறன் அடிப்படையிலான பதிவுகள். அது நீதிமன்ற செயல்பாட்டை எப்படி பாதிக்கின்றன என்று கூறியிருந்தார். எனவே, இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது” என்று கூறியிருந்தார்.


மேலும் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், “நீதித் துறையைக் களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை. தலைமை நீதிபதி பாப்டே நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீதுதான் அமர்ந்திருந்தார் என்பதை நான் கவனிக்காமல் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் பிரஷாந்த் பூஷனின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இந்த இரண்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here