இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களைச் சந்தித்தது மிகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளதால் ஊடகங்களைச் சந்திக்கிறோம் என அவர்கள் கூறியது நீதித்துறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுப்புவதற்கு வழிவகுத்து விட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஊடகங்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானதிலிருந்து பல்வேறு ஊகங்களை எழுப்பியது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

scj1

அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் தாங்கள் பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர், கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகவும் அவர்கள் பேசினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் ஊடகங்களைச் சந்திக்கவுள்ளார் என கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களைச் சந்தித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் வழக்குகள் ஒதுக்கீடு, கொலிஜியத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கு உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்