உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக முதன்முறையாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியாக இல்லை என்றும், கடந்த சில மாதங்களாக விரும்பத்தாகத நிகழ்வுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், நீதித்துறை குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்றும், தங்கள் கவலைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்பியதால் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தைப் பாதுகாக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது என்றும், இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here