உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் ரிசர்வ் வங்கி ; RTI -யில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
404

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது .  30 வாடிக்கையாளர்கள் மட்டும் வங்கிகளிடமிருந்து கடனாக பெற்ற ரூ 2.86 லட்சம் கோடிகளை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் , 30  வாடிக்கையாளர்களின் வாராக் கடன்கள்,  மொத்த வாராக் கடனில் மூன்றில் 1 சதவீதம் என்று தெரியவந்துள்ளது. 

இந்தியாவின்  வங்கிகளில் , 2019  மார்ச் 31 வரையில்  வாராக் கடன்களின் மொத்த மதிப்பு 9.49 லட்சம் கோடிகள் ஆகும்.

ரிசர்வ் வங்கியிடம் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் The Wire தளம்   கேட்ட கேள்விக்கு அளித்த பதிலின் மூலம் இது தெரிய வந்துள்ளது. ரிசர்வ் வங்கி அளித்த பதிலின்படி, 30 பேர் செலுத்தாத வாராக் கடன்களின் மதிப்பு 2.86 லட்சம் கோடிகள் என்று தெரியவந்துள்ளது .

கடனை திருப்பி செலுத்தாத 30 பேரின் பெயர்களை வெளியிட  ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் யார் அவர்கள் எவ்வளவு திருப்பி செலுத்த வேண்டும்  என்பது குறித்த தகவல்கள் தன்னிடம் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறு தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட மறுத்திருப்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது .  வாராக் கடன் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . கடன்களை செலுத்தாத இந்த 30 வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடாதது ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு குறித்த சில கேள்விகளை எழுப்புகிறது . 

உதாரணத்துக்கு, ரிசர்வ் வங்கி சொல்வது போல் யார் எவ்வளவு கடனை செலுத்தவில்லை என்ற தகவல்கள் அவர்களிடம்  இல்லையென்றால் 30  வாடிக்கையாளர்களின் வாராக் கடன்கள் மொத்த வாராக் கடனில் மூன்றில் 1% என்கிற கணக்கை அதாவது 30 பேர் செலுத்தாத வாராக் கடன்களின் மதிப்பு 2.86 லட்சம் கோடிகள் என்று ரிசர்வ் வங்கியால் எப்படி கூற  முடிகிறது ?

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத 30 பேரின் விவரங்கள் குறித்து ‘தி வயர்’ தளம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்க மறுத்து விட்டது  ரிசர்வ் வங்கி. 25 லட்சம் மற்றும் 25 லட்சத்துக்கும் மேலான வாராக் கடன் குறித்த விவரங்கள் கடன் சீரமைப்பு நிறுவனங்களின் இணையதளத்திலேயே (Credit Information Companies) வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

2019 ஏப்ரல் 26-ஆம் தேதி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வர்த்தக வங்கிகளின் தணிக்கை அறிக்கையை தகவல் வெளியீட்டு சட்டத்தின் கீழ்  வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ரிசர்வ் வங்கி, இவ்வாறு தகவல்களை வெளியிட மறுப்பது, 2015-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்க  ரிசர்வ் வங்கிக்கு இதுவே ’கடைசி வாய்ப்பு’ எனவும் இதற்கு மேலும் விவரங்களை மறைக்க முயற்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பிய போது ரிசர்வ் வங்கி தொடர்ந்து விவரங்களை வெளியிட மறுத்து வந்த போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது . இது குறித்து சுபாஷ் சந்திர அகர்வால் கூறுகையில் ரிசர்வ் வங்கி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை வெளியிடாததன் மூலம்  தனது பொறுப்பை உணரவில்லை, பொறுப்பிலிருந்து விலகி செல்கிறது  என்கிறார். 

மேலும் இது வெறும் கண் துடைப்புதான். ரிசர்வ் வங்கி தனது கடமையில் இருந்து தவறி விட்டது. ஒழுங்கு முறை அமைப்பாக செயல்படும் ரிசர்வ் வங்கி இந்த தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும் . தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(F) இதற்கான அதிகாரத்தை ரிசர்வ் வங்கிக்கு வழங்குகின்றது.   பொது மக்களின் அக்கறைக்குரிய தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் , தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தான் கொடுக்க வேண்டும் என்றிருக்ககூடாது என்கிறார் அகர்வால்.

2019 , பிப்ரவரி 28 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய போது ரிசர்வ் வங்கி பதிலளித்தது –  வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத 30 வாடிக்கையாளரின் மொத்தத் தொகை ரூ 2,86,325 கோடி.

ஏப்ரல் 2017 ஆம் ஆண்டிலிருந்து , மக்களுக்கு  பல மாநில அரசுகள் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியின் மொத்த மதிப்பைவிட இந்த வாராக்கடனின் மொத்த தொகை 50% அதிகம் . மாநில அரசுகள் அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியின், மொத்த மதிப்பு 1.9 லட்சம் கோடி. வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத 30 வாடிக்கையாளரின் மொத்தத் தொகை ரூ 2,86,325 கோடி. 

மேலும், மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கப்பல் தொழில், போக்குவரத்து தொழில்களுக்கு – ரிசர்வ் வங்கி குறிப்பிடுவது போல  நடுத்தர தொழில்களுக்கு – வழங்கப்பட்ட  கடன்களை விட இந்த 30 வாடிக்கையாளர்கள்  திருப்பிச் செலுத்தாத கடனின் மதிப்பு அதிகமாகும்.

ரிசர்வ் வங்கி குறிப்பிடும் 30 வாடிக்கையாளர்கள் செலுத்தாமல் ஏமாற்றிய கடன்களின் சராசரி ரூ. 9,544 கோடி. அதாவது ஒவ்வொருவரும் சராசரியாக செலுத்த வேண்டிய தொகை இது.  விஜய் மல்லையா கொடுக்க வேண்டிய  தொகை ரூ. 9,000 கோடி ; ஜெட் ஏர்வேஸ் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ. 8,700 கோடி. 30 வாடிக்கையாளர்ளில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகையை திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள் என்ற தகவலை ரிசர்வ் வங்கி வெளியிடாததால் நமக்கு அதைப்பற்றி கூற முடியவில்லை. 

தி வயர் தளத்தின் தீரஜ் மிஸ்ரா வெளியிட்ட தகவலின்படி பார்த்தால் முதல் 100 வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத  வாராக் கடன்களின் மதிப்பு ரூ. 4.5 லட்சம் கோடி , அதாவது மொத்த வாராக் கடனின் 47% . 

ரிசர்வ் வங்கி அளித்த  விவரத்தின் படி,  30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ. 8.42 லட்சம் கோடிகளைப் வங்கிகளிடமிருந்து கடனாக  பெற்றுள்ளனர்.  வங்கிகள் கொடுத்த மொத்த கடன்களின் மதிப்பு ரூ. 85.16 லட்சம் கோடிகள் ,  அதாவது மொத்த கடன்களில் 10 சதவீதம் கடன்களை  வெறும் 30 வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.  

 விவசாயத்துக்கு  வழங்கப்பட்ட மொத்தக் கடன்களின் மதிப்பு வெறும்  ரூ. 11.07 லட்சம் கோடிகள்தான். வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடனின்  மொத்த தொகையின் மதிப்பு இந்த 30 வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த தொகையில் பாதிதான். மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பில் 10 சதவீத்தை  வெறும் 30 வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here