‘உச்சநீதிமன்றமே எங்களுடையது’ உத்தர பிரதேச பாஜக அமைச்சர்

0
193

சர்ச்சைக்குரிய இடமான பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டாமல் இருக்க வாய்ப்பே இல்லை ஏனென்றால் உச்சநீதிமன்றமே எங்களுடையதுதான் என்று  உத்தர பிரதேச அமைச்சர் மற்றும்  பாஜக தலைவருமான   முகுத் பிகாரி வர்மா கூறியுள்ளார். 

ராமர் கோயிலை கட்டுவது என்பது எங்கள் கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்று . உச்சநீதிமன்றம் எங்களுடையது. நீதித் துறை, இந்த நாடு, கோயில்கள் எல்லாமே எங்களுடையதுதான் என்று உத்தரபிரதேசத்தின் கூட்டுறவு அமைச்சர் முகுத் பிகாரி வர்மா கூறியுள்ளார். 

சர்ச்சைக்குரிய ராமர் கோயில் கட்டுமிடம் தொடர்பாக 2 வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பாபர் மசூதி இடித்தது தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மற்றுமொரு வழக்கை உச்சநீதிமன்ரம் விசாரித்து வருகிறது. 

உத்தரபிரதேசத்தின் கூட்டுறவு அமைச்சர் முகுத் பிகாரி வர்மா பேசியது  பெருத்த சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து தான் அவ்வாறு கூறவில்லை என்றும் இந்தியர்கள் நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றுதான் கூறினேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார். பாஜக அரசுக்கு சொந்தமானது என்று நான் கூறவில்லை என்றும்  பின்பு விளக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய ராமர் கோயில் வழக்கு நடந்து வருவது குறித்து பல பாஜக அமைச்சர்கள் தங்களது அதிருப்தியைத் தெருவித்து வந்தனர். உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் 2019 தேர்தலின் போது இந்த  பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார். அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கூறியிருந்தார். 

பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தலைவர் அமித் ஷா டிசம்பர் 2018 இல் கூறியிருந்தார்.