இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் 38,000 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டும் முன்னர் 37,994.51 புள்ளிகளுடன் தொடங்கியது.

இதே போல நிஃப்டி இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 11,493.25 என்ற அளவில் தொடங்கி 9.29 மணி அளவில் 11,495.20 புள்ளிகளைத் தொட்டது.

மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 38,005.65 என்ற வீதத்தில் கீழ் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இது 118.09 புள்ளிகள் அல்லது 0.31 சதவிகித வளர்ச்சி ஆகும்.

இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறீயீட்டு எண் நிஃப்டி 25.75 புள்ளிகள் உடன் அதாவது 0.22 சதவிகித வளர்ச்சி உடன் 11,475.75 என்ற புள்ளிக்கணக்கில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

நிஃப்டி 11,500 புள்ளிகள் என்ற நிலையை எட்டும்போது நிச்சயமாக ஒரு எதிர்ப்பு நிலை உருவாகும். இதனால் வர்த்தகம் அடுத்த சில நாள்களுக்கு நிச்சயமாக வளர்ச்சிப் பாதையிலேயே பயணிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான எண்ணெய் வர்த்தகம் மற்றும் அமெரிக்காவுக்கு ரஷ்யா உடனான வர்த்தகப் போக்கு ஆகியவற்றின் காரணமாக ஆசியப் பங்குகள் சற்று தொய்வு அடைந்துள்ளன.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here