மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டு போட்டார்கள், கருணாநிதிக்கு அல்ல, ஸ்டாலினின் தந்தை எப்படி முதல்வர் ஆனார்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்தபின்னர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில் ,
அண்ணா பிறந்தமாவட்டம் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். அண்ணா தனது உழைப்பால் முதல்வராகி துரதிஷ்டவசமாக மறைந்து விட்டார். அப்பொழுது கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வராக வந்தார். அவர் நேரடியாக முதல்வராக ஆகவில்லை. மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டுபோட்டார்கள். தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி அண்ணாவுக்கு இருக்கிறது என்பதால் தான் மக்கள் அவர் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தார்கள்.
கருணாநிதிக்கு அல்ல. இவருடைய தந்தை எப்படி முதல்வர் ஆனாரே அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஆனார். நான் ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வர் ஆனேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய அப்பா எட்டிக் குதித்து வந்தா முதல்வர் ஆனார். கவிஞர் கண்ணதாசன் தனது சுயசரிதையில் கருணாநிதி எப்படி ரெயிலில் வந்தார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நான் அப்படி வரவில்லை என்றார்.