ஐ.ஓ.எஸ். ஆப்களை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன.

இது குறித்த தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். ஆப்கள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட ஆப்களை பயன்படுத்துவோரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், மிகமுக்கிய விவரங்களையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இவற்றில் எந்த ஆப்களும் உங்களிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை.

இந்த ஆப்கள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது. உங்களது ஸ்கிரீனினை இந்த ஐ.ஓ.எஸ். ஆப்கள் பதிவு செய்வதை உங்களால் கண்டறிய முடியாத படி மிகத் துல்லியமாக அவை செயல்படுகின்றன.

இந்தக் குறைபாட்டை உடனடியாகச் சரி செய்யது செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஐ.ஓ.எஸ். ஆப்களான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உங்கள் அனுமதியின்றி உங்களுடைய ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் ஆப்கள் முதலிடம் வகிக்கின்றன.

இந்த செஷன் ரீபிளே தொழில்நுட்பம், ஆப்களில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் போன்றவற்றைப் பதிவு செய்யும். எனினும், நீங்கள் ஆப்களைப் பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செயல்ப்படும்.

மேலும் ஆப்களை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது உங்களுடைய மிகமுக்கிய விவரங்களை ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும். உங்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வர்களுக்கு(Server) அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் உங்களின் விவரங்களை இயக்க முடியும்.

இந்த செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்