ஒரு புத்தகத்தை வெளியிடும் கனவில் இருக்கிறீர்களா? அது அழகாக, தரமாக வர வேண்டுமா? நீங்கள் எதிர்பார்த்த தரமான, செலவு குறைந்த சேவை இதுதான்.

நான் ஓர் ஆராய்ச்சி மாணவன். எனது முனைவர் படிப்புக்குத் தகவல் சேகரிக்கும்போது உண்டான புதிய பார்வைகளை, எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைத்தேன். நான் எழுதியவை அனைத்தும் சேர்த்து 200 பக்கங்களுக்கு வந்தது. இதனைப் புத்தக வடிவில் குறைந்தபட்சம் எனது ஆசிரியர்களுக்கும் நட்பு வட்டத்திற்கும் தர வேண்டுமென்று விருப்பப்பட்டேன். எனது நண்பர் ஒருவர் என் மீது அன்பு கொண்டு அதனைப் புத்தக வடிவில் வடிவமைத்துக் கொடுத்தார். அடுத்த கட்டம், இதனை அழகிய நூலாக – வண்ண அட்டையுடன் – அச்சில் வார்த்துக் கையில் தொட்டு உணர வேண்டும். இருபது பேராவது அதைப் படித்த பின்னர் இதனை மக்கள் ரசிப்பார்களா என்று முடிவு செய்யலாம். அப்போதுதான் சென்னை மைலாப்பூரில் ரியல் இம்பாக்ட் சொல்யூஷன்ஸில் (REAL IMPACT SOLUTIONS) மூன்று புத்தகங்களைக்கூட அச்சிட முடியும் என்று ஒரு நண்பர் சொன்னார். போனேன். பார்த்தேன். இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் எனது புத்தகங்களின் 25 பிரதிகளை அச்சில் வடித்தெடுத்தேன். அந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போதே அளவில்லா ஆனந்தம் ஏற்பட்டது. டிஜிட்டல் உலகில் சாத்தியமாகியுள்ள இந்த பிரின்ட்-ஆன்-டிமாண்ட் (PRINT ON DEMAND) பற்றி வளர்ந்து வரும் எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதனை எழுதுகிறேன்.

வீட்டிலிருந்தே சமையல் குறிப்புகளைப் பத்து வருடங்களாக எழுதி வந்த இல்லத்தரசி ஒருவர் இதே சேவையைப் பயன்படுத்தி தனது முதல் நூலின் முதல் நூறு பிரதிகளை அச்சடித்திருக்கிறார். எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அவர் முகத்தில் பார்த்தேன் என்பதை எழுத்தில் விவரிக்க முடியாது. சென்னை அடையாறில் ஒரு பெண்மணி, பக்திப் பாடல்களைப் பாடியும் எழுதியும் வந்திருக்கிறார். இதனைப் புத்தகமாகப் போட வேண்டுமென்று உறவினர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறார். அவர்களோ புத்தகமாக போட வேண்டுமென்றால் லட்ச ரூபாய் வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நாள் கணையாழி பத்திரிகையில் ரியல் இம்பாக்ட் சொல்யூஷன்ஸ் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு போன் செய்திருக்கிறார். இருபது வருடங்களாக 300 பக்கத்துக்குப் பாடல்கள் எழுதி வைத்திருக்கிறேன். இதைப் புத்தகமாக வடிவமைத்து ஐந்து காப்பிகள் அச்சடித்தாவது வைக்க வேண்டுமென்று தன் ஆசையைச் சொல்லியிருக்கிறார். இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் அவரது இருபதாண்டு கால எண்ணம் ஈடேறிய அந்தக் கணத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். வேற லெவல் மகிழ்ச்சி அது.

நீங்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், உலகின் எந்தத் தீவில் வசித்தாலும் சரி, ஓர் அழகிய நூலின் ஆசிரியராக இருந்தால் அதிகபட்ச தரத்தில் மிகக் குறைந்த விலையில் அதனை அச்சிட்டு பேருந்திலோ, கூரியரிலோ, விமானத்திலோ போட்டு விடுகிற முழுப் பொறுப்பையும் ரியல் இம்பாக்ட் சொல்யூஷன்ஸ் ஏற்கிறது. உங்கள் கனவுப் புத்தகத்துக்கு இன்றைக்கே அழகிய வடிவம் கொடுங்கள்.

ரியல் இம்பாக்ட் சொல்யூஷன்ஸ், சென்னை

REAL IMPACT SOLUTIONS, CHENNAI

+919841293503

REAL IMPACT SOLUTIONS ஸ்ரீகுமார் உங்களது புத்தகங்களை எளிய முறையில் பதிப்பிக்கலாம் என்பதை விளக்கும் காணொளி

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here