உங்கள் உரிமைகள் பறிக்கப்பட்ட நாள் இன்று

மாநிலங்களின் உரிமைகள் மட்டுமல்ல, மக்களின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன.

0
338
Demonetization move not just disrespected the rights of the states but also the fundamental rights of the citizens

“இந்த நாட்டிலுள்ள எல்லோரும் திருடர்கள்; வங்கிகளுக்குச் சென்று உங்கள் பணத்தை ஒப்படைத்து, நீங்கள் திருடர் அல்ல என்று நிரூபணம் செய்யுங்கள்” என்று பிரதமர் மோடி அறிவித்த நாள் இது; 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்கிற நடவடிக்கை பற்றி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமார்த்யா சென் இப்படித்தான் விளக்கமளித்தார். இப்படியொரு முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கை உலகில் யாராலும் எடுக்கப்பட்டதில்லை. நாட்டில் புழக்கத்திலிருந்த பத்தில் ஒன்பது பங்கு ரூபாயை ஓர் இரவில் (நவம்பர் 8, 2016) செல்லாது என்று அறிவித்த மடமை மக்களை ஏமாளிகளாக நினைக்கும் ஓர் அரசின் செயல்பாடு; சர்வாதிகாரத்தின் உச்சம். இந்த நடவடிகைக்கு முன்பு மத்தியிலுள்ள எந்த மந்திரிகளும் கலந்தாலோசிக்கப்படவில்லை; எந்த மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை தரப்படவில்லை. ஜெயலலிதா சுட்டிக்காட்டியதுபோல “மாநிலங்களை வெறும் அலங்கரிக்கப்பட்ட நகராட்சிகளைப்போலத்தான் மத்திய அரசு நடத்துகிறது.”

உத்தரப் பிரதேசத்திலுள்ள முன்னணி பத்திரிகையாளர்கள், இந்த நடவடிக்கை அந்த மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஜெயிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மோடி-அமித் ஷா கூட்டு நடவடிக்கை என்றார்கள். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தின் ஊட்டச்சத்தான முறைசாரா தொழில்கள் முடங்கிப் போய்விட்டன. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வேலை இழந்தார்கள். பசியும் பட்டினியும் அதிகமாகியிருக்கிறது. உலகில் பட்டினி அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. ஏழை, எளிய மக்களையும் சாதாரண நடுத்தர மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்திய இந்தப் பொருளாதார நடவடிக்கையை மா சேதுங்கின் சிட்டுக்குருவி ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒப்பிட்டிருந்தார் எழுத்தாளர் அமித் வர்மா. சிட்டுக்குருவி ஒழிப்பால் பல்கிப்பெருகிய வெட்டுக்கிளிகள் எப்படி விவசாயத்தை அழித்தன என்பதையும் அதனால் எப்படி விவசாயிகளின் பட்டினிச்சாவுகள் அதிகமானது என்பதையும் விவரித்திருந்தார். இந்த அபத்த நடவடிக்கையால் உண்டான துயரங்களை இப்போது டாட் காம் மக்களின் பார்வையிலிருந்து விரிவாக பதிவு செய்தது. சென்னை தியாகராய நகர் பிரகாசம் சாலை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாசலில் பணத்தை மாற்ற நீண்ட வரிசையில் நின்ற பெரியவர் ஒருவர் இப்படிப் பாடினார்: “பொன்னான பாரதம்…..புத்தி கெட்டு போச்சுது.”

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்