ஆட்சியக் கவிழ்ப்பதற்கு திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும் என அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது தொடர்பான வழக்கில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வரப்போவதாகவும், தனக்கு வந்த செய்திகளின்படி ஆட்சி முடிந்துவிட்டது என்றும் பேசினார். மேலும் இந்த ஆட்சி மட்டுமல்ல அந்தக் கட்சியே முடிவுக்கு வந்துவிடும் எனவும் பேசினார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது குறித்து பேசிய ஸ்டாலின், ”27 அம்சங்கள் கொண்ட கோரிக்கைகளுடன் நான் இந்த ஆய்வறிக்கையை கோட்டையில் முதலமைச்சர், துணை முதல்வர், போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களிடம் அளித்து இருக்கிறோம். அங்கு சென்றதும், காபி, டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். உடனே அவருடைய பதவி பறிபோனது. இவர்கள் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. எனவே, 15 நிமிடம் இருந்து டீ வாங்கி குடித்து விட்டு தான் வந்தேன். அதென்ன, அவர்கள் பணமா, மக்களுடைய வரிப்பணம், உங்களுடைய பணம் என்பதால் டீ குடித்து விட்டு வந்தேன்.” என்றார்.

முதல்வர் எடப்படி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், இதெற்கெல்லாம் கிங் கமிஷனாக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருவதாகவும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்