தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவீட் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான ராகுல் காந்தி.
மதுரைஅவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுநடைபெறுகிறது. இந்த விழாவை காண காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான ராகுல்காந்தி மதுரை வருகிறார். அவர், ‘ராகுலின் தமிழ்வணக்கம்’ என்ற பெயரில்தமிழர்களின் பாரம்பரியம்மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.
இன்று மதியம் 12 மணியளவில் அவர் மதுரை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்ததுடன், தான் தமிழகம் வருவதையும் தமிழிலேயே டிவீட் செய்து உறுதி செய்துள்ளார் ராகுல்.
அவர், ‘’அனைவருக்கும் எனது இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்’’ என்று தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.